அரசியல்

இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி

2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இபிஎஸ்க்காக இதை சொல்ல வேண்டுமா?

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அதற்காக நான் 220 என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

மக்கள் தான் முடிவெடுப்பார்கள்

அதை மக்கள் தான் முடிவெடுப்பார்கள். நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதலமைச்சர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.