கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் இருந்த பா.ம.கவை, தற்போது வளைக்க ஆளும் தி.மு.க பாசம் காட்டி பின்வாசல் வழியே பேரம் பேசுவதாக கசியும் தகவல்கள் தமிழக அரசியலை மட்டுமின்றி, தி.மு.க கூட்டணியில் இருக்கும் திருமாவையும் அதிர வைத்தது.
2026 தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பாமக வந்துவிட்டது என கூறப்படுகிறது. தான் செல்லும் புதிய கூட்டணியில் விசிகவும் இருக்கும் நிலை வரலாம் என்பதால்தான் விசிகவை ஆதரவு டோனில் அணுகி, இணக்கமான சூழலை ஏற்படுத்தி வந்தது பாமக. இப்படியான சூழலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகவே, மற்றொரு ஆப்ஷனாக திமுக தலைமையுடன் பாமக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்னை, தொடர் தோல்வி, அங்கீகாரம் மற்றும் சின்னம் பறிபோனது உள்ளிட்டவற்றால் பாமக தடுமாறி வருகிறது. எனவே, 2026 தேர்தலில் பாமகவின் வெற்றி சதவிகிதம் அதிகரிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதனால் குறைந்த சீட்டுகளை பெற்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு தி.மு.க கூட்டணியே சரியென பாமக நினைப்பாதாக கூறப்படுகிறது. அதேசமயம், 2026 தேர்தல் பலமுனை போட்டியாக இருக்கும் என்பதால், பா.ம.கவை கூட்டணிக்குள் கொண்டுவந்து கூட்டணியை பலப்படுத்த திமு.கவும் விரும்புகிறது. இதற்கிடையே, 'பாம.க. பா.ஜ.க இருக்குமிடத்தில் இருக்க மாட்டோம்' என திருமா உறுதியாக இருப்பதால், பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றி திருமாவிடம் அறிவாலயம் தரப்பில் சமாதானம் பேசப்பட்டிருப்பதாக முணுமுணுக்கின்றனர் உடன்பிறப்புகள்.
இதன் காரணமாகத்தான் ஏப்ரல் 20ம் தேதி ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் பேசியபோது, 'ஏதோ நாம் தி.மு.கவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்' என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசுவிடமே இது பற்றி கேட்டோம். அவர், ”முதலமைச்சரே இந்தச் செய்தியை மறுத்திருக்கிறாரே... மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியைச் சேர்ப்பது, யாரை சேர்க்கக் கூடாது என்று முடிவெடுக்கும் உரிமை அந்தக் கூட்டணியின் தலைவரான ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. ஆனால், 'சாதியவாத பா.ம.க., மதவாத பா.ஜ.க.வோடு ஒருபோதும் கூட்டணியில்லை' என்று திருமா தெளிவாக அறிவித்துவிட்டார். அப்படியென்றால், 'ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேரும்பட்சத்தில், நாங்கள் வெளியேறுவோம்' என்றுதானே அதற்கு அர்த்தம். எந்தக் கட்சிக்குமே இந்த துணிச்சல் வராது” என கூறினார்.
மேலும், வேறு போக்கிடம் இல்லாததால் தான் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை வி.சி.க இருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் பலமுறை வி.சி.கவை அவர்களுடைய கூட்டணிக்கு அழைத்திருக்கிறார்கள். 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என விஜய் வி.சி.க.வை மனதில் வைத்தே ஆஃபர் கொடுத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டின் கேம் சேஞ்சரே வி.சி.க. தான், திருமா தான். எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருந்ததால்தான், இன்றைக்கு பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி அமைந்திருக்கிறது. அதி.மு.க எத்தனையோ முயற்சி செய்தும் மிகுந்த தெளிவோடு தி.மு.க.வோடு இருப்பதில் உறுதியாக இருந்தோம்.
“நாங்கள் மட்டும் கொஞ்சம் அசைந்திருந்தால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கூட்டணியின் போக்கே மாறிப் போயிருக்கும். எனவே, வேறு போக்கிடம் இல்லாமல் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இல்லை. இன்னமும்கூட எங்களுக்கு ஆஃபரும், ஆப்ஷனும் இருக்கிறது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறும். ராமதாஸ் மாதிரி பேரம் பேசும் கேமில் நாங்கள் இறங்கினால் எல்லாம் முடிந்துபோகும். ஆனால்,எங்களுக்கு அது தேவையில்லை. 'எண்ணிக்கை முக்கியமில்லை... இலக்கு தான் முக்கியம்' என்று தி.மு.க. கூட்டணியில், கொண்ட கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார். மேலும், 2026 தேர்தலுக்குப் பிறகு சினிமாவுக்குப் போய் விஜய் முழுநேர கவனம் செலுத்துவாரே ஒழிய, 2026க்குப் பிறகு அரசியலில் விஜய்யோ, த.வெ.கவோ இருக்காது” என அவர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக எந்த கட்சி எந்த கூட்டணியில் சேர்கிறது, யார் எந்த கூட்டணியில் இருந்து விலகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..