தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்திற்கு, தமிழக அரசு அனைத்துவிதமான முட்டுக்கட்டைகளையும் போடுவதாக, அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அரியலூர், பெரம்பலூர் பயணங்களுக்கு மட்டும் 23 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாளை (செப். 13) முதல் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பயணங்கள்குறித்த செய்தியாளர் சந்திப்பில் நிர்மல்குமார் பேசினார்.
விஜய் பிரச்சாரத்திற்காகக் கடந்த 12 நாட்களாகப் போராடி இன்றுதான் பெரம்பலூர் மற்றும் அரியலூர் பயணங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதற்கும்கூட, 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்று எந்தக் கட்சிக்கும், குறிப்பாக அதிமுகவிற்கு, இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில்லை. திமுக அரசு காவல்துறை மூலம் முழு ஆதரவு தருகிறது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்?" என்று நிர்மல்குமார் ஆவேசமாகக் கூறினார்.
கடுமையான நிபந்தனைகள்
காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளில், "கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம்; குச்சி, கம்பு, ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது; எந்த விதிமீறல் நடந்தாலும் பயணம் நிறுத்தப்படும்" போன்ற அம்சங்கள் கடுமையானவையென அவர் சுட்டிக்காட்டினார்.
"எங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை வைத்து ஒரு பல்கலைக்கழத் தேர்வையே எழுதிவிடலாம்," என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். "இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் இருந்தும் ஏன் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை?" என்ற கேள்விக்கு, "ஒரு நாள் பயணத்திற்காக 12 நாட்கள் போராடி அனுமதி வாங்கியுள்ளோம். இந்த நிலைமையில் நாங்கள் எங்கு நீதிமன்றத்திற்குச் செல்வது?" என்று பதிலளித்தார்.
விஜயின் பயணத்திற்குப் பேனர்கள் வைக்கக் காவல்துறை அனுமதி மறுத்ததற்குக் காரணம், எங்கள் தலைவர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்பதால்" என நிர்மல்குமார் பதிலளித்தார்.
திருச்சி தேர்வு செய்தது ஏன்?
வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பிரச்சாரப் பயணம் ஏன் என்ற கேள்விக்கு, "வாரத்திற்கு ஒருநாள் செல்வதற்கே 12 நாட்கள் போராடி அனுமதி பெற்றுள்ளோம். தினந்தோறும் சென்றால் நிலைமை எப்படி இருக்கும்? என்று பதிலளித்தார்.
பிரச்சாரத்தைத் திருச்சியிலிருந்து தொடங்குவது ஏன் என்ற கேள்விக்கு, திருச்சி எப்போதும் வரலாறு படைத்த பகுதி. எனவேதான் இந்தப் பயணத்தைத் திருச்சியிலிருந்து துவங்குகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.