தற்போது அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், கழக செய்தித் தொடர்புச் செயலாளர் பொறுப்பினையும் வகித்து வருகிறார் S.கோகுல இந்திரா. இவரது கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் கட்சி பிரதிநிதிகள் பலரும் A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “கழக முன்னாள் அமைச்சர் திருமதி.S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் சந்திரசேகர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது கணவரை இழந்து வாடும் திருமதி.கோகுல இந்திரா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் சகோதரி திருமதி. கோகுல இந்திரா அவர்களின் கணவர் வழக்கறிஞர் திரு.சந்திரசேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 25, 2025
திரு. சந்திரசேகர் அவர்களை இழந்துவாடும் திருமதி. கோகுல இந்திரா உட்பட…
#அஇஅதிமுக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் திருமதி. S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் திரு. A.R.சந்திரசேகர் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய துயரச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK (@Vijayabaskarofl) April 24, 2025
இணையரை இழந்து வாடும் அன்புச் சகோதரிக்கு மாண்புமிகு… pic.twitter.com/ki7ZN7Tzqr
கழக முன்னாள் அமைச்சர் திருமதி.S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் சந்திரசேகர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) April 25, 2025
தனது கணவரை இழந்து வாடும் திருமதி.கோகுல இந்திரா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத்…