அரசியல்

புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்.. கூட்டணி அமைத்தது தவெக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கடைசி நேரத்தில் ஒரு புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது.

புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்.. கூட்டணி அமைத்தது தவெக!
TVK & NMK
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கடைசி நேரத்தில் ஒரு புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில், இந்தத் திடீர் திருப்பம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'நேயம் மக்கள் கழகம்' என்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"புதுச்சேரி மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 'நேயம் மக்கள் கழகம்' நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 'உருளையன்பேட்டை மற்றும் 'தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.