தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகம் வந்த யூடியூப் புகழ் வாட்டர் மெலன் ஸ்டார்... திவாகர் செய்த செயலால் சிரிப்பலை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி

 ஆட்சியர் அலுவலகம் வந்த யூடியூப் புகழ் வாட்டர் மெலன் ஸ்டார்... திவாகர் செய்த செயலால் சிரிப்பலை
யூடியூப் புகழ் திவாகர்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் "டாக்டர்", பெயருக்கு பின்னால், "PT" என்றும் குறிப்பிட அனுமதி வழங்கியது. அதேபோல் NEET தேர்வில் தேர்ச்சி அடையும் நபர்கள் மட்டுமே இனி பிஸியோதேரபி பயில முடியும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இணையதளப் புகழ் இயன்முறை மருத்துவர் திவாகர்( Watermelon star) மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் அளித்த பேட்டியில், "கடந்த 60 ஆண்டு காலமாக இயன்முறை மருத்துவர்களின் போராட்டத்திற்கு பிறகு பிசியோதெரபி மருத்துவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்", என்றும் பெயருக்கு பின்னால் "PT", என்றும் பதிவு கொள்ளலாம், குறைந்த அளவிலான வலி நிவாரண மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என தேசிய கூட்டு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தொழில்முறை கவுன்சில் அறிவித்தது.

அரசுக்கு கோரிக்கை

இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் நீட் தேர்வு எழுதி தான் பிஸியோதேரபி பயில முடியும் ஒரு கல்லூரியில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள், முன்பு அனைவரும் பிஸியோதேரபி கல்லூரி தொடங்கலாம் .இனி விதிமுறைகள் அனைத்து பூர்த்தியானால் மட்டுமே தொடங்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. அதேபோல் எங்களுக்கு தமிழில் இயன்முறை மருத்துவர் என்ற பெயரை பெற்று தந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் எனங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவர்களை பகுதி நேர மருத்துவர்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை மாற்றி முழு நேர பணியாளர்களாக பணியமற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன்", என கூறினார்.

சிரிப்பலை

திடீரென மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு என்ட்ரி கொடுத்த வாட்டர் மெலன் ஸ்டாருடம் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும் 3, கஜினி திரைப்பட காட்சிகளை நடித்து காண்பித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.