அரசியல்

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

 வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சி அகற்றப்படும்

பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “வரும் தேர்தலில் திமுக ஆட்சி தமிழகத்திலிருந்து அகற்றப்படும்.

தமிழர் திருநாளில், தமிழ் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என்.டி.ஏ கூட்டணி பெருபான்மையை பெறும்

இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, மதுபோதை, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வெட்டு குத்து கொலை என நடக்கிறது. இதிலிருந்து மாற்றம் வரவேண்டும்.என்.டி.ஏ., தலைமையிலான கூட்டணி அண்ணன் இ.பி.எஸ்., தலைமையில் பெரும்பான்மையாக வெற்றி பெறும் என தெரிவித்தார்.