‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம்
அப்போது அவர், “குரூப் 4 தேர்வை 13 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கபட வில்லை. மேலும், தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள்களை முறையாக சீல் வைத்துக்கொண்டு போகவில்லை. எனவே குரூப் 4 தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்ச்சியை வைத்து பணியமர்த்தினால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படும்.
அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். 2011 – 2020ம் ஆண்டு வரை அ.தி.மு.க., ஆட்சியில் செய்ததை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் வெளியில் பேச வேண்டாம். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. 75 ஆயிரம் பேர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதியதாக இதுவரை நியமிக்கவில்லை.
செயலிழந்த நிலையில் காவல்துறை
தமிழகத்தில் காவல்துறை செயலழந்து கிடக்கிறது. இன்றைக்கு உள்ள அரசியல் பிரமுகர்கள் காவல்துறையை சுகந்திரமாக செயல்படாமல் வைத்துள்ளனர். எனவே போலீசாரால் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை. 2348 பேர் பள்ளி, கல்லுாரி அருகே கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்தாக காவல்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர் தான். மீதம் உள்ள நபர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.
வென்டிலேட்டரில் திமுக ஆட்சி
முதல்வரின் முகவரி திட்டம் என முதலில் அறிவித்தார், அது காணமல் போகிவிட்டது. அதன்பின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயர் வைத்தார். தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைத்துள்ளார்கள். 2026ல் ஓட்டு என்ற வென்டிலேட்டர் பிடிங்கினால் ஆட்சி போகிவிடும்.
மக்களை பற்றி இந்தனை நாளாக முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை. கும்பகர துாக்கத்தில் இருந்து முதல்வர் விழித்துக்கொண்டு இருக்கிறார். தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து பேட்டிக்கொடுக்க நான்கு துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். இது வெக்கடோனது. இந்நிலையில், வாங்கிய மனுக்கள் 1.05 கோடி, தீர்வு கண்டது 1.01 கோடி. அந்த ஐ.ஏ.எஸ்., கூறிய தேதியில் 27 லட்சம் மனுக்கள் தான் வந்துள்ளது. பச்சை பொய் கூறியுள்ளனர். இது குறித்து அ.தி.முக., ஆட்சிக்கு வந்தவுடன் விசாரிக்கப்படும். தவறான புள்ளி விபரத்தை அரசு அதிகாரி கூறியுள்ளார்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு
திமுகவுக்கு தான் சிறுபாண்மை வாக்குகள் என பேசுகிறார்கள். சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை. சாதி, மதத்திற்கு அப்பறப்பட்ட கட்சி அதிமுக. எங்களை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி, அ.தி.மு.க., கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காது” இவ்வாறு அவர் பேசினார்.