அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.
தேர்தல் கள நிலவரம் மற்றும் கூட்டணிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், வரவிருக்கும் தேர்தலில் நான்குமுனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வின் விருப்ப மனு விநியோகம்
சமீபத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை நடத்தி முடித்த அ.தி.மு.க., அதன் தொடர்ச்சியாகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.15) முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7