இந்தியா

உடைமாற்றும் அறைக்குள் நுழைந்த மான்.. வெளிவராமல் அடம்பிடித்த வீடியோ வைரல்

கேரளாவில் உடை மாற்றும் அறைக்குள் புகுந்த புள்ளிமான் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உடைமாற்றும் அறைக்குள் நுழைந்த மான்.. வெளிவராமல் அடம்பிடித்த வீடியோ வைரல்
கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமானை நாய்கள் துரத்தியது. இதனால் அச்சமடைந்த அந்த மான் நகர் பகுதிக்குள் நுழைந்து எங்கு செல்வது என்று தெரியாமல் பல பகுதிகளுக்குள் ஓடி திரிந்தது.

இறுதியில் ஒரு துணி கடைக்குள் நுழைந்தது. உடைமாற்றும் கண்ணாடி அறைக்குள் நுழைந்ததால் மானின் உருவம் அங்கிருந்த கண்ணாடிகளில் பல உருவங்களாக தெரிந்தது. இதனால் அந்த மான் கூட்டத்தில் இருப்பதாக நினைத்து அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி புள்ளி மானை பத்திரமாக மீட்டு அடர் வனப் பகுதிக்குள் விடுவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாய்கள் துரத்தியதில் துணி கடைக்குள் புகுந்த புள்ளிமான் உடைமாற்றும் கண்ணாடி அறைக்குள் நுழைந்து கண்ணாடியில் தெரிவது தான் உருவம் என தெரியாமல் மான் கூட்டத்தில் தான் இருக்கிறோம் என நின்ற இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.