கடலூரில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடுரமாக கொன்றதுடன் சடலங்களை எரித்தது தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத்தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு, கொலையாளிகளுக்கான ஆயுள் தண்டனைனையை உறுதி செய்தது.