இந்தியா

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047'  - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!
நடப்பு நிதி ஆண்டுக்கான 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாரத்தின் மையக் கருத்தாக, 'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்து ஒருங்கிணைந்த நீண்டகாலத் திட்டங்களை மாநிலங்கள் வகுக்க வேண்டும் என்பது இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாநிலங்களின் பங்களிப்பு, ஒருங்கிணைந்த நீண்டகால வளர்ச்சி திட்டங்கள், பொதுத்துறையின் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கமுள்ள வளர்ச்சி ஆகியவை முக்கிய அம்சங்களாக பேசப்பட உள்ளன.

அதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுகாதார சேவைகள், கல்வி மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் முடிவெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான நிதிகள் குறித்தும், விவாதித்து முறையிடப் போவதாக தெரிவித்திருந்தார்.