இந்தியா

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!
'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!
ஏப்ரல் 3 ஆம் தேதி தனது நிறுவனத்தின் தயாரிப்பான குலாப் சர்பத்தை விளம்பரப்படுத்தும் போது ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப் படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் ராம்தேவ் என பேசினார். இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறிய வார்த்தை சர்ச்சையானது. இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ராம்தேவ் தனது பிரபலமான பானமான ரூஹ் அஃப்சாவை குறிவைத்து வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, மருந்து மற்றும் உணவு நிறுவனமான ஹம்டார்ட் அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில், நீதிபதி அமித் பன்சால் ஏப்ரல் 22 ஆம் தேதி வழங்கிய உத்தரவை மீண்டும் வலியுறுத்தினார்.

நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்த பிறகு, அன்று பதஞ்சலி மற்றும் ராம்தேவ் சார்பாக நாயர் ஆஜராகி, அச்சு வடிவிலோ அல்லது வீடியோக்களாகவோ உள்ள விளம்பரங்கள் நீக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

பின்னர் நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட மாட்டேன் என்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்தேவுக்கு உத்தரவிட்டது.