பயங்கரவாதத்தை வேரறுப்பது அவசியமானது
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவ அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ பயங்கரவாததை முற்றிலுமாக வேரறுப்பது அவசியமானது. பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு மனமார்ந்த நன்றி
மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் எப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கிறதோ, அதேபோல் நாமும் துணிவாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஆபரேஷன் சிந்தூர் மூலம் துணிச்சலான நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்திற்கும், அவர்களுடன் உறுதியாக நின்ற பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றிகள். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். ஜெய்ஹிந்த்...” என பதிவிட்டிருந்தார்.