கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கப்பற்படை அலுவலக தொலைபேசியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணி அளவில் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன் பெயர் ராகவன் எனவும் பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் தற்போது எங்கு உள்ளது எனவும் அது தொடர்பான விபரங்கள் தேவை எனவும் கேட்டுள்ளார் .
இளைஞர் கைது
இந்த தொலைபேசி அழைப்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து கப்பல் படை அதிகாரிகள் துறைமுக போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறியது போலி என்பது தெரியவந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை தீவிரமாக தேடினர்.
போலீசாரின் விசாரணையில் கோழிக்கோடு, எலத்தூரைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் பற்றிய தகவல்கள் எதற்காக கேட்டார் எனவும் அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட முஜீப் தற்பொழுது கொச்சிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முஜீப் மனநலநோயிக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கவுள்ளதாக கொச்சி சிட்டி கமிஷ்னர் விமலாதித்தியா தெரிவித்தார்.