லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரின் 65-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கெனவே குஜராத், பெங்களூரு,பஞ்சாப், மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், இனி வரும் லீக் போட்டிகள் புள்ளிப்பட்டியலில் யார் முதல் இரண்டு இடத்தை பிடிக்கப்போகிறார் என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாக தான் இருக்கும். 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள பெங்களூரு இன்று வென்றால் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்று உறுதியாகிவிடும் என்பதால், இப்போட்டி பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம் போல அதிரடி காட்டினர். அபிஷேக் சர்மா (17 பந்துகளில் 34 ரன்கள்) மற்றும் ஹெட் 17 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய பாக்கெட் டைனமோ என அழைக்கப்படும் இஷான் கிஷான் பந்துகளை நாலாப்புறமும் பறக்க விட்டார். 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
அனிகேத் வர்மா (9 பந்துகளில் 26 ரன்கள்), ஹெய்ன்ரிச் கிளாசன் (13 பந்துகளில் 24 ரன்கள்) மற்றும் அபினவ் மனோகர் (11 பந்துகளில் 12 ரன்கள்) எடுக்க 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில், ரோமரியோ ஷெப்பர்ட் 2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி என்கிடி தனது 4 ஓவர்களில் 51 ரன்களை வாரி வழங்கிய நிலையில் ஒரு விக்கெட்டை எடுத்தார். க்ருனால் பாண்டியா 4 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
232 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது களமிறங்கியுள்ளது. பவுலிங்கில் மொத்தமாக சொதப்பிய நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற பெங்களூரு அணி பேட்டிங்கில் தனது முழுப்பலத்தை காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.