திரை இசை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளையராஜா பேச்சு
விழாவில் பேசிய இளையராஜா, “ஒரு நாள் ஸ்டூடியோவில் ரஜினி என்னிடம், 'நாம குடிச்சோம் நியாபமிருக்கா? நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன்' என்றார். அதற்கு, 'நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க, எனக்கு கவலையில்லை' என்று நான் சொன்னேன்” என்றார்.
ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டிக்கதை
இதைக்கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் அருகில் வந்து பேசினார். “ஜானி' படத்திற்கு இசையமைக்கும்போது இயக்குனர் மகேந்திரன் மற்றும் இளையராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, இளையராஜாவிடம், 'சாமி சரக்கு அடிக்கலாமா?' என்று கேட்டேன். அவரும் உடனே 'சரி' என்றார். வெறும் ஒரு ஆஃப் பீர் குடித்துவிட்டு, அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே... அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சிரித்தபடி கூறினார்.
மேலும், “சினிமா கதைகளையும், பாடல்களையும் மறந்துவிட்டு, ஊரில் உள்ள கிசுகிசுக்களைப் பேசத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, ஹீரோயின்களைப் பற்றிய கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம். இதுவெல்லாம் வெறும் டிரெய்லர் தான்... இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது. அதை இன்னொரு மேடையில் சொல்கிறேன்” என்று சிரித்தபடி ரஜினிகாந்த் சொல்ல, அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.
ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்ட இளையராஜா, “இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.