ரஜினி- நெல்சன் கூட்டணி
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினி மற்றும் நெல்சனின் முந்தையை படங்களின் தாக்கத்தால் எந்த எதிர்பார்ப்பு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து ரஜினி வேட்டையன், கூலி ஆகிய படங்களில் நடித்தார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு
இதைத்தொடர்ந்து நெல்சன், ரஜினி கூட்டணி உருவாகும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் தற்போது விருவிருப்படைந்துள்ளது. கூலி படம் நிறைவடைந்தவுடன் கையோடு ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிப்பார் என கூறப்பட்டது. ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க போகிறார்கள் என்றும் எஸ்.ஜே.சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரஜினி சார்ந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜெயிலர்2 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குட் பேட் அக்லிக்கு வாழ்த்து
இதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்ததால் காலை முதலே திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ஜெயிலர் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்றார். அஜித் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி உள்ளது.அது குறித்து கேட்டபோது, வாழ்த்துக்கள்.. காட் பிளஸ் யூ என தெரிவித்து கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.
சினிமா
அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி
ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்