தமிழ்நாடு

நீடிக்காத சந்தோஷம்.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீடிக்காத சந்தோஷம்.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?
இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தை சரிவு

பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடு விரும்புகின்றனர். அதன் காரணமாகவே தங்கத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றத்தினால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கத்தின் விலை திடீரேன்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பரஸ்பர விதி

கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதனால், உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதால், தங்கம் விலையிலும் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது.

ஒரே நாளில் 2 முறை விலையேற்றம்

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.66,300-க்கு விற்பனையானது. தொடர்ந்து, பின்னர் மீண்டும் ரூ.960 அதிகரித்தது ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.67,260-க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான முதலீடு

பொதுவாகவே மக்களிடம் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புவது தங்கத்தில் தான். அதன் காரணமாகவே தங்கத்தின் மீதான முதலீட்டில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் விலை கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 8 ஆம் தேதியான நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம், ஏப்ரல் 9 ஆம் தேதி, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது.