K U M U D A M   N E W S
Promotional Banner

நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் நூல்கள்; ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் அணை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

'இதை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள்'.. மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்!

''மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தவெக கொடியை கிண்டலடித்த மேடை பேச்சாளர்.. வச்சி செய்த விஜய் ரசிகர்கள்!

''ஏதோ ஒரு வகையில் புகழ்பெற்ற ஒருவர் அரசியலில் நுழையும் போதெல்லாம் அதை காமெடியாக்கும் விஷமப் பிரச்சார இயக்கம் சமூகத்திற்கே ஜனநாயக பேரிழிவும் அபாயமும் ஆகும்'' என்று விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மொழிப்போர் தியாகிகளை கையில் எடுத்த விஜய்.. திமுக, சீமானை ஓவர்டேக் செய்வாரா?..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.

சீனியர்ஸ் Rocked.. எடப்பாடி Shocked... சுக்கு நூறாக நொறுங்கிய EPS கனவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்?.. பாஜகவுடன் கூட்டணியா? - ஹெச்.ராஜா ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ரூ.68,773 கோடி திட்டம், 1,06,800 பேருக்கு வேலை வாய்ப்புகள்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம், 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

”இனிமேல் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...” யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

யுபிஎஸ்சியில் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் நியமிக்க வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

திமுகவுடன் கூட்டணியா? – சூசகமாக சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

33% ஆட்சியில் தானா? கட்சியில் இல்லையா? 1 பெண், 1 தலித் மா.செக்கள் திமுகவின் சமூகநீதி இதுதானா?

2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தயாராகிவரும் நிலையில், மா.செக்கள் மாற்றம் மற்றும் மா.செக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகநீதி பேசும் திமுகவில் பெண் மா.செக்கள் மற்றும் தலித் மா.செக்கள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்

விஜய் தெரியும், மு.க.ஸ்டாலின்னா யாரு?.. பதக்கம் வென்ற வீராங்கனை கொடுத்த பதில்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார். 

இபிஎஸ் கிணற்றுத் தவளை.. ஜாதிய வன்மத்துடன் பேசி வருகிறார்.. அண்ணாமலை காட்டம்

எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க வழக்கு வரக்கூடாது.. இதுதான் ஸ்டாலின் பிளான்.. ஆர்.பி.உதயகுமார்

உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

விஜய்யை மாட்டிவிட தான் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்

அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கவர்னர் தேநீர் விருந்து.. கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு.. தொடர்புபடுத்திய இ.பி.எஸ்.

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!

''ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சீமான் சாடினார்.

தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.

Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. பெருமகிழ்ச்சியில் விவசாயிகள்!

Chief Minister Stalin Inaugurates Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

"யாரையாவது அடித்தால் போலீஸ் வருவாங்க.. போலீஸை அடித்தால் யாரும் வருவதில்லை.." - காவலர் குமுறல்

தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் காவலர்களுக்காக கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற காவலர் வேதனையோடு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Upcoming Elections : தி.நகர், எழும்பூரில் திமுக முக்கிய புள்ளிகளின் வாரிசுகள்... ரேஸில் அன்பழகன், பரிதி இளம்வழுதி மகன்கள்!

DMK Candidates in Upcoming Elections : 2026 சட்டமன்றதேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கடந்த மாதமே திமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பக்கம் அதிமுகவும் தனது பங்கிற்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது. இப்படி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.