தமிழ்நாடு

அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பிரபல நடிகர்...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பிரபல நடிகர்...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருகோயிலில் நடிகர் கெளதம் கார்த்திக் சாமி தரிசனம்
நடிகர் கெளதம் கார்த்திக்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலிலுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரும் சமீப காலமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கடல், ரங்கூன், தேவராட்டம், பத்து தல உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம் செய்தார்.

செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து திருக்கோயில் சார்பாக அவருக்கு பிரசாதம் மற்றும் மரியாதை அளிக்கப்பட்டது.

கோயிலுக்கு வந்திருந்த நடிகர் கௌதம் கார்த்திக் உடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.