சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பு...ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்

தலைவா, தெய்வமே, தெய்வமே என குரல் எழுப்பிய ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்ற நடிகர் ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 படப்பிடிப்பு...ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தை பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள்
ஜெயிலர் 2 படப்பிடிப்பு

தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடியில் பகுதியில் கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றார்.

ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் தங்கி இருக்கக் கூடிய ரிசார்ட் முன்பாக கூடி வருகின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சூட்டிங் கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்து விட்டு அங்கு இருந்து ஷூட்டிங் கிளம்பி சென்றார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்கின்ற கோவை அருகே உள்ள தமிழக சோதனை சாவடியான மாங்கரை அருகே இன்று படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் வந்து இருந்தார். தகவல் அறிந்த ரசிகர்கள் அவரை பார்க்க அங்கு கூடி இருந்தனர். இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்ற போது ரசிகர்கள் தலைவா... தெய்வமே...என குரல் எழுப்பி அவரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் அங்கு இருந்து கடந்து சென்றார்.