ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எம் ஜி ஆர் ஜெயலலிதா நல்லாசியோடு நல்லாட்சி அமையும் என அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக தெரிவித்தார்.
அதிமுகவின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கோவிட் தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் முழுமையான ஊதியம் வழங்கியதோடு, மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் ஆக்கியதாகவும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாத திமுக ஆட்சியில் கல்விப் பணி எப்படி சிறக்கும் எனவும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்த திமுக அரசு, தற்போது ககன் தீப்சிங் பேடி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்திருப்பதாகவும், பொறுத்திருந்து பாருங்கள் என நிதியமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், திமுகவால் அதனை செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, விடுப்பை வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக அரசுக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறினார். மேலும், எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடலுடன் தனது உரையை நிறைவு செய்தார்.