'பள்ளிக்கூடம்' ஒரு புதுமையான ஆன்லைன் தளமாகும். அதாவது நடனம், பாட்டு பாடுதல், நடிப்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு கலைகளை ஆன்லைன் வாயிலாக 'பள்ளிக்கூடம்' தளம் கற்றுக் கொடுக்கிறது.
Heavy Rain in Wayanad Landlside Area : நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Lyricist Na Muthukumar Memorial Day 2024 : தமிழ் சினிமா ரசிகர்களை தனது வரிகளால் கட்டிப்போட்டவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். சந்தோஷம், சோகம், அழுகை, காதல் தோல்வி, காதல் வெற்றி, டீனேஜ், யூத், ஒரு தலை காதல், இரு தலை காதல், திருமனத்திற்கு பிறகான காதல், நட்பு என எந்த ஜானராக இருந்தாலும் இளசுகள் முதல் பெருசுகள் வரை மனதை கரைய வைக்கும் அளவிற்கு அவரது பாடல் வரிகள் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான நா.முத்துக்குமாரின் 8வது நினைவு தினம் இன்று.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திமுக கொத்தடிமைகள் கூடாரம், உதயநிதி துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் திமுகவினரின் சுயமரியாதை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Private TV Founder Devanathan Arrest : கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bollywood Actor Shah Rukh Khan Praised South Indian Cinema : ''தென் இந்திய சினிமாவில் சிறு பட்ஜெட்டில் வெளியாகும் படங்களும் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதற்கு உதாரணமாக மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தை கூறலாம். தென் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருவதற்கு தரமான இளம் இயக்குநர்கள் உருவாகி வருவதே காரணம்'' என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
Theni Rescue Operation : பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கச்சென்றபோது மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் அந்த குளிர்பானத்தை ஆய்வு செய்து நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ADMK Ex Minister CM Shanmugam Defamation Case : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
Paris Olympics 2024 : கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024, இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.
Tattoo Controversy : பெண்ணின் மார்பகத்தில் தமிழ் கடவுளான முருகனின் உருவப்படம் வரையப்பட்டதாக வெளியான புகைப்படத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
D Jayakumar on Deputy Chief Minister Qualification : துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இருந்தால்தான் மந்திரியாக முடியும். அதுதான் அடிப்படையான தகுதியா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
Adani Group Denied Hindenburg Allegation : ''எங்கள் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டது. இப்போது ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள தனிநபர்களுடன் அதானி குழும நிறுவனங்கள் எந்த வணிக உறவும் வைத்துக் கொள்ளவில்லை'' என்று அதானி குழுமம் கூறியுள்ளது.
Paris Olympics 2024 : இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. ஓலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் இரட்டை பதக்க நாயகி மனு பாக்கர் மற்றும் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்ற ஸ்ரீஜேஷ் ஆகியோர் நமது தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.