சினிமா

‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் தகவல்

‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் தகவல்
Lokesh Kanagaraj - Coolie Update
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில், நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன், ஃபகத் பாசில், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், பல்வேறு மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலானது. டி.ராஜேந்தரின் குரலில் ஒலிக்கும் தாளத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. மேலும் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு அறிவு வரிகள் எழுதியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியிடப்பட்ட ‘மோனிகா..’ பாடல் இணையத்தில் வைரலாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்டு வருகின்றனர்.

‘சிக்கிடு வைப்..’ மற்றும் ‘மோனிகா..’ பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ட்ரெய்லர் வெளியிடாமல் நேரடியாக படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவின.

இந்த நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் அவர், ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது ட்ரெய்லர் அப்டேடுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.