தமிழ்நாடு

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு…சேலத்தில் பெரும் பரபரப்பு

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு…சேலத்தில் பெரும் பரபரப்பு
சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு
சேலம் மாவட்டம், அண்ணா பூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக, அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் வீச்சு

இதேபோல் ஓரணியில் தமிழகம் உள்ளிட்ட திட்டங்கள் வழியாக திமுகவினரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக மூத்த தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தந்தையுமான மறைந்த முதல்வர் கருணாநிதி நிலை மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்த நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.