Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள்
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்
வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 24-10-2024
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் ED RAID.. முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? | Kumudam News 24x7
அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.