#JUSTIN: CBSE பள்ளிகள் கட்டணம் சரிபார்ப்பு - நீதிமன்றம் புதிய உத்தரவு | Kumudam News 24x7
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்ற உத்தரவு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்ற உத்தரவு.
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஈஷா யோகா மைய நிறுவனத்துக்கு எதிரான சோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Madurai High Court About OTT Platforms Censor : ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.