K U M U D A M   N E W S

Chennai

MahaVishnu: மகாவிஷ்ணு அலுவலகத்தில் கிடைத்த 3 ஹார்டு டிஸ்க்... வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸார்!

அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... சைக்கோ நபரால் பரபரப்பு!

சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீர் மின் தடை ஏற்பட்டது ஏன்?.. மின்வாரியம் விளக்கம்!

'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கு விசாரணை.. நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருமண மோசடி செய்த கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமின்

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

Temporary Teachers Protest : என்னாச்சு..! என்னச்சு..!! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள்

Temporary Teachers Protest in Chennai : சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம் | Kumudam News 24x7

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Jiiva: குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா... சாலையில் தலைகீழாக கவிழ்ந்த சொகுசு கார்!

சேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜீவாவும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் வாழ்க்கையை சீரழித்த மது விருந்து!

சென்னையில் மது விருந்துக்கு சென்ற மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

BREAKING | போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் - அரசு வைத்த செக்

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

LIVE | சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி - மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. சைபர் கிரைம் விசாரணை..

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி