K U M U D A M   N E W S

AI

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இடி, மின்னலுடன் மிதமான மழை.... தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆதார் சேவை மையத்தில் குவிந்த மக்கள்

மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன் அதிரடி

விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

BREAKING | போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் - அரசு வைத்த செக்

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

BREAKING | அதிமுக-விற்கு அழைப்பு விடுத்த திருமா - உடனே முடிவை சொன்ன ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

LIVE | சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி - மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு

இது தொழில் தொடங்குவதற்கான பயணம் தானா? பொள்ளாச்சி ஜெயராமன்

இங்கே இருக்கும் தொழில்களுக்கெல்லாம் மின்சார கட்டணத்தில் சலுகை கொடுக்காமல், அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துக்கொண்டிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்

ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!

ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!

RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் - ஆர்.பி உதயகுமார்

RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் என்று ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. சைபர் கிரைம் விசாரணை..

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Old Age Home in Tamil Nadu: மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கட்ட உத்தரவு | District Wise Old Age Home

Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Speaker Appavu Case : செப்.13ம் தேதி அப்பாவு ஆஜராக உத்தரவு | ADMK MLA | Chennai Special Court

AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” - துரை வைகோ!

Durai Vaiko about Vijay: விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம் தான் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Kanguva: கங்குவா ரன்னிங் டைம்... OTT ரிலீஸில் புது சிக்கல்... சூர்யா ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரன்னிங் டைம் குறித்தும், இதன் ஓடிடி ரிலீஸ் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஒன்று விந்து, இரண்டு கண்ணீர்.. வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!

Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.