K U M U D A M   N E W S

சென்னை உயர்நீதிமன்றம்

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரன் வழக்கு; சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு -சிபிஐ வழக்குப்பதிவு

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Savukku Shankar Case: சவுக்கு சங்கர் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி வேண்டாம்... உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...!

கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட   வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது, என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

"வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள், SC/ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது” என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரம்... புகார்தாரர் மனு தள்ளுபடி..!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற  தமிழக அரசு  தயார்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற  தமிழக அரசு  தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு..  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.