K U M U D A M   N E W S
Promotional Banner

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி

மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்

காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்பு..!

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டு கட்டடத்தில் கல்வி பயிலும் அவலம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் கனமழை

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை

பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம்

"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரயிலில் கற்களை வீசி அட்டூழியம் - வீடியோ வெளியீடு

சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Salem Rains: சாலையில் தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.. 25 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்..!

அரசு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 25 ஆசியர்களை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

கட்டட பணிக்கு செங்கல் சுமந்த மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்!

அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசுசு மருத்துவமனையில் சிகிச்சை.

திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்

திருச்சி மாவட்டத்தில் அதிமுகவினர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு என தகவல் வருவதாக இபிஎஸ் எச்சரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாஜிக்கள் அண்ணாமலை வசம் வந்துவிட்டதாகவும், அதிமுகவின் பலமாக கருதப்படும் கொங்கு மண்டலம் பாஜக கண்ட்ரோலில் சென்றுவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.