பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, 12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
மேலும், வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனையும் , மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழக்க சட்டத்திருந்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த நான்கு நிமிடங்களில் பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வந்த வேகத்தில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?