K U M U D A M   N E W S

தமிழ்நாடு

"சுதர்சன் வீடியோ எடுக்குறான்" வேங்கைவயல் விவகாரம்..வெளியான அதிர்ச்சி ஆடியோ,வீடியோ

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம்.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் - இரும்பின் தொன்மை குறித்தான காணொலி

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் தொடங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்

திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த  திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிறைவு

4 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வந்தது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

துணைவேந்தர்கள் நியமனம் - உச்சநீதிமன்றம் அதிரடி

"பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும்"

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

களைகட்டும் காணும் பொங்கல்.. சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் காணும் பொங்கல் திருவிழா கோலாகலம்.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஜன.18-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் 6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.

அரசியல் கோமாளி அண்ணாமலை.. அமைதி காக்கும் பழனிசாமி- கீதா ஜீவன் விளாசல்

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா  கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பொங்கல் திருநாள்: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.