பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்..!
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், 90க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் குவெட்டாவிலிருநது தஃப்தானுக்கு, 7-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பேரணியாக சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பேருந்து முற்றிலும் சேதமானது. தாக்குதலில், 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தகவலறிந்து வந்த ராணுவத்தினர், படுகாயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்' என கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பெறுப்பெற்ற பலூச் விடுதலை இயக்கம், 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த அமைப்பு சில நாட்களுக்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சுமார் 400 பயணிகள் பயணித்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் கூடலர், பிரு குன்ரி நகரங்களுக்கு இடையே மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் ரயிலை கடத்தியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






