K U M U D A M   N E W S

தமிழ்நாடு

விதிகளை மீறினாரா? மருத்துவர் பாலாஜி மீது மருத்துவ கவுன்சிலில் புகார்..!

மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Ariyalur: ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா... முதலமைச்சர் அடிக்கல்..

ஜெயங்கொண்டத்தில் தைவானை சேர்ந்த DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரயிலில் மாணவர்கள் அட்டகாசம் - போலீசார் வழக்குப்பதிவு  

ஐந்து கல்லூரி மாணவர்கள்  மீது மூன்று பிரிவுகள் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.படியில் பயணம் செய்தல், ஆபாசமாக பேசுதல், ரயில் பயணிகளை அச்சுறுத்தல் ஆகிய 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் -  விக்னேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள்.. சென்னையில் அதிரடியாக 4 பேர் கைது..!

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

பள்ளிகளில் வாக்குச்சாவடி.. சுத்தம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி

வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.