K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

அமைச்சர்களை ஓரங்கட்டிய மேயரின் கணவர்..! கட்டம் கட்டிய கட்சித் தலைமை..! பக்காவாக காய்நகர்த்தும் மூர்த்தி..!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

ரவுடியிச தடுப்பு நடவடிக்கை.. 150 ரவுடிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.