தமிழ்நாடு

Gold Rate: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Gold Rate: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!
Gold Rate
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (செப்.11) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,920 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.240 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,015 என்ற விலையை எட்டியுள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.