சுழற்பந்தில் சுருண்ட வங்கதேசம்
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்கதேச மகளிர் அணிக்கு, இந்திய அணியின் துல்லியமான சுழற்பந்து வீச்சு முட்டுக்கட்டையாக அமைந்தது. துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் 21 ரன்களிலும், ஜுவைரியா பெர்தௌஸ் 14 ரன்களிலும் வெளியேறினர். இதனிடையே கிராந்தி கவுட் ஓடிவந்து பிடித்த அபார கேட்ச் ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனையாக மாறியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய தீப்தி சர்மா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?
ஏற்கனவே 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, தற்போது 8-வது முறையாகக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதியில் வெற்றிபெறும் அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. அடைந்த 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









