தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு நலத்திட்டங்களை வழங்கவும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இன்று சென்னையில் இருந்து கரூர் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குச் செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலமாகச் சாலை மார்க்கமாகக் கரூருக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி கரூரில் திருகாம்பலியூர் பைபாஸ், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாகச் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிரம்மாண்ட 'ரோடு ஷோ' (Road Show) நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுடைய 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுத் துறைகளில் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து, வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்க மைதானத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வானவாசி ஊராட்சியில் சுமார் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய தனியார் தோல் சாரா காலணி தயாரிப்புத் தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த அதிரடி கரூர் வருகையையொட்டி, கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LIVE 24 X 7