அசுர வேகத்தில் பாயும் வழக்குகள்... என்ன செய்ய போகிறது திமுக...

அசுர வேகத்தில் பாயும் வழக்குகள்... என்ன செய்ய போகிறது திமுக...

அன்பில் மகேஷ் கைது, துரைமுருகன் மீதான மணல் முறைகேடு வழக்கு, கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு தொடர்பான விசாரணைகள் என திமுக முன்னாள் அமைச்சர்களைச் சுற்றி ஊழல் புகார் வழக்குகள் தீவிரமடைந்துள்ளன.

Author: kazhugu k அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்த விஜய், முதலமைச்சராக, பதவி ஏற்றதும் அது தொடர்பான வழக்கு விசாரணைகளை வேகமாக நகர்த்தி வருகிறார்.

திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் 400 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான மற்ற ஊழல் புகார் வழக்குகளில் தவெக அரசு வேகம் காட்டி வருகிறது... கே.என், நேரு தொடர்புடைய இடங்களில், மீண்டும், மீண்டும் சோதனை,எவ வேலுவிடம் தொடர் விசாரணை என நடவடிக்கைகள் என வரிசை நீள்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக திமுக, தனது ஆட்சி சாதனைகளில் ஒன்றாக கூறிவரும் கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அரசுக்கு 1,427 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நகர்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு நடத்திய, மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி, இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் துரை முருகன் உள்ளிட்ட 27 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன..

ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ளோர் என, 18 அரசு அதிகாரிகள், 9 தனிநபர்களின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. மேலும், சில நிறுவனங்களின் வாயிலாக, அரசை ஏமாற்றவும், இயற்கை வளமான ஆற்று மணலை கொள்ளையடிக்கவும் கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையில் மணல் அள்ளினால், அதனால் நீர் மட்டம் குறைந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது துரைமுகன் உள்ளிட்டோருக்கு தெரியும், என்ற போதில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும், நான்கு குவாரிகளில் மட்டும் சட்ட விரோதமாக மணல் அள்ளியதில், 1,427 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் முந்தைய ஆட்சியாளர்கள், மீது வழக்குள் பதியப்படுவது வழக்கமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் தீவிரத்தை கருத்தில் எடுத்து கொள்ளாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் தற்போது திமுக முன்ளாள் அமைச்சர்கள் மீது தவெக அரசு எடுத்து வரும் சட்ட நடடிக்கைகளை சாதாரணமாக பார்க்க முடியாது என்பதே அரசியல் நேக்கர்களின் கருத்தாக உள்ளது. திமுக வழக்குகளை எளிதாக எதிர்க்கொள்ளும் என்ற கருத்து வழக்கமாக நிலவிய போதிலும், பள்ளிக்கல்விதுறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்காமல் இருப்பது, திமுக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அன்பில் மகேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டதையும் திமுகவினர் எதிர்பார்க்கவில்லை. இதன் தொடச்சியாக திமுக பொது செயலாளர் துரைமுருகன்,  மணல் முறைகேடு வழக்கில் முதல் நபராக சேர்க்கபட்டுள்ளார்.

இது சட்ட நடவடிக்கையாக பார்க்கபட்டாலும், சட்ட ஒழுங்கு பிரச்சினையில் தவெக அரசுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால், திமுக மீதான ஊழல் வழக்குளை தீவிரப்படுத்தி, அதை இடைத்தேர்தலின் போது மிகப்பெரிய பிரசார யுக்தியாக தவெக கையில் எடுக்கும் என்றே கருதப்படுகிறது.