தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுத் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து மாற்றுத் திறனாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில்இணையும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று பிரமாண்டமான இணைப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 10,000 பேர் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
குறிப்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்களாகவும் முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த கடலூர் மாவட்டத்தின் எம்.சி.சம்பத், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் தவெகவில் இணைந்துள்ளனர். முக்கியத் தலைவர்கள் கூண்டோடு விலகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கட்சித் தாவல்கள்
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முன்னாள் டி.ஜி.பி-யுமான நட்ராஜ் ஆகியோர் தவெகவில் இணைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நடப்பு எம்.எல்.ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டத் திட்டம்
தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதால், பனையூர் அலுவலகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர். இன்றைய பிரமாண்ட இணைப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக மற்றொரு பெரிய அளவிலான இணைப்பு விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LIVE 24 X 7