மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால், அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் வெற்றிபெற த.வெ.க. தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
அதேவேளையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடம் என்பதால், தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அ.தி.மு.க-வும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தலில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற கட்சிகளை விட முந்திக்கொண்டு திமுக தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான பரந்தாமன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா திமுக வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் தாராபுரத்தில் இரண்டாம் இடத்தையும், மதுராந்தகத்தில் மூன்றாம் இடத்தையும் திமுக பிடித்திருந்தது.
ஆளும் த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகியவை விருப்பமனுக்களைப் பெற்று ஆலோசனைகளை நடத்தி வரும் சூழலில், இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால், திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LIVE 24 X 7