K U M U D A M   N E W S

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!

இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆண்கள் உரிமைத் தொகை.. பல்டி அடித்த அமைச்சர் பெரிய கருப்பன்..

ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

'இதுதான் தமிழ்நாடு'.. வைகோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தம்பிதுரை.. தமிமுன் அன்சாரி பாராட்டு!

''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Olympic Medal: ஒரே வாரத்தில் துருபிடித்த ஒலிம்பிக் பதக்கம்.. அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

''ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றபோது, தொடக்கத்தில் அந்த பதக்கம் பளபளப்புடன் இருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள் பதக்கம் வெளுத்து விட்டது'' என்று அமெரிக்க வீரர் நிஜா ஹஸ்டன் கூறியுள்ளார்.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'நான் நடித்து இருந்தால் இந்த படம் வெளிவராது'.. திருமாவளவன் ஓபன் டாக்!

''திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும். நேர்மை இருக்கும். உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு நேர்மையுடன் உடனடியாக திருமாவளவன் தண்டனை கொடுப்பார்'' என்று 'தோழர் சேகுவேரா' பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Shobita Dhulipala: “கவித கவித..” குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!

Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோபிதா துலிபலா, நாக சைதன்யா மீதான காதலை குறுந்தொகை பாடலுடன் கவிதையாக தெரிவித்துள்ளார்.

Olympics: ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்... டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Kottukkaali: சூரியின் கொட்டுக்காளி எப்படி இருக்கு..? சிவகார்த்திகேயன் முதல் பிரபலங்களின் விமர்சனம்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற கொடுக்காளி படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Kavundampalayam: “ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான்..” கவுண்டம்பாளையம் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!

Actor Ranjith about Honour Killing : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்த்த ரஞ்சித், ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Olympics: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்... இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... அமன் ஷெராவத் அசத்தல்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

Pondicherry Rain: புதுச்சேரியில் அடித்து நொறுக்கிய கனமழை... கரைபுரண்டோடிய வெள்ளம்... மக்கள் அவதி!

புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Andhagan BoxOffice Collection: அந்தகன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்... கம்பேக் கொடுத்த பிரசாந்த்

டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் கோயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடமும் தேமுதிக தொண்டர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.