பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

Sep 1, 2024 - 12:17
 0
பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!
தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலைலண்டனில் உள்ள புகழ் பெற்ற 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும், 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை படிப்பதற்காகத் தேர்வாகியிருந்தார். 17 வாரங்களை கொண்ட இந்த படிப்புக்காக இந்தியாவில் இருந்து அண்ணாமலையுடன் 12 பேர் தேர்வாகி இருந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'செவனிங்' உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) மூலம் 'சர்வதேச அரசியல்' படிப்புக்கு அண்ணாமலை தேர்வான நிலையில், அங்கு சென்று படிப்பதற்காக கடந்த 28ம் தேதி அதிகாலை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் லண்டனில் படிப்பைத் தொடர்ந்து கொண்டே, அங்கிருந்தபடியே தமிழக பாஜகவின் அரசியல் பணிகளையும் கவனிக்கிறேன் என கட்சியின் மேலிடத்திடம் அண்ணாமலை கூறியிருந்தாராம். ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையின் கோரிக்கை நிராகரித்தது. அத்துடன் தமிழக பாஜகவின் கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.

எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் குழுதான், கட்சிக் கூட்டங்களை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, 

இந்நிலையில் வரவிருக்கும் 2026 தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த தமிழ்நாட்டில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித் தனியாக நிர்வாகிகள் நியமித்து ஒவ்வொரு பூத்திலுகும் குறைந்தது 200 பேரையாவது சேர்க்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, "தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. குறைந்தது ஒரு கோடி பேரையாவது சேர்க்க வேண்டும். நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க உள்ளார்” என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

“பாஜகவில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் 8800002024 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள். அந்த எண்ணுக்கு வரும் லிங்க்-ஐ திறந்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை எழுதி அனுப்பினால் போதும். உடனே அவர்கள் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுவார்கள்” என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow