இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலியாகவும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பாகிஸ்தானில் 16 இந்திய யூடியூப் சேனல்கள், 31 யூடியூப் இணைப்புகள், 32 வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.