உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், பிசினஸ் இன்சைடர் பத்திரிகையின் அறிக்கைப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அலுவலகம் வருகை கொள்கையினை ஜனவரி மாதம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பணிக்கொள்கை:
வாஷிங்டன், ரெட்மண்ட் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நெகிழ்வான பணிச்சூழல் வாய்ப்பினை (Flexible Work Model) குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது முதலே மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஒரு நெகிழ்வான பணிச்சூழல் கொள்கையினை வகுத்து பின்பற்றி வருகிறது.
தற்போதைய கொள்கையின் படி, ஊழியர்கள் தங்கள் மேலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், வாரத்தில் பாதி நேரத்திற்கு மேல் (அதாவது, 50% அல்லது அதற்கும் குறைவாக) வீட்டிலிருந்து பணியாற்றலாம். வேலை மற்றும் குழுவின் தேவைகளைப் பொறுத்து, ஊழியர்கள் தங்கள் பணி நேரம், இடம் மற்றும் வேலை செய்யும் நாட்கள் ஆகியவற்றைப் பற்றி முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த கொள்கை ஊழியர்களுக்கு சௌகரியமாக இருப்பதால், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிய பணிக்கொள்கை என்ன?
தற்போதுள்ள Flexible Work முறையானது முற்றிலும் ஒரு சில ஊழியர்களுக்கு நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கட்டாயப்படுத்தவுள்ளது. செப்டம்பர் மாதத்திலேயே இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட நிறுவனம் முதலில் திட்டமிட்டிருந்தாலும், இன்னும் சில விவரங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ளதால் அடுத்தாண்டு ஜனவரி முதல் புதிய பணிக்கொள்கை அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் ஃபிராங்க் ஷா, தங்கள் நெகிழ்வான பணி வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், எந்த இறுதி முடிவும் தற்போது வரௌ எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களை நெருக்கும் நிறுவனங்கள்:
சமீபத்தில் அமேசான் நிறுவனம் ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவித்தது. ஏடி அண்ட் டி (AT&T) நிறுவனமும் ஊழியர்களுக்கு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஸ்டான்கி, ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரியும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது வேறு வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில், மெட்டா மற்றும் கூகிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வரிசையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் பணிக்கொள்கையினை மாற்ற திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில குழுக்கள் ஏற்கனவே இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. கார்ப்பரேட், வெளிப்புற மற்றும் சட்ட விவகாரங்கள் (CELA) குழுவின் ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கும் மேலாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.