உணவுக்காகக் காத்திருப்போரை கொல்வது, உதவி மையங்களில் பொதுமக்கள் கொலையென இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பட்டினி சாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்துள்ளது. அதில் 89 குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவில் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இதுவரை 60 ஆயிரத்து 249 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அவதியுற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடப் பாதுகாப்பற்ற நிலையில் உயிரிழக்கின்றனர் என்பது தொடர்பாக, உலக நாடுகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், உதவி மையங்களில் கூடப் பாதுகாப்பு இல்லாத நிலை, மற்றும் உணவுக்காகக் காத்திருப்பவர்களுக்கே தாக்குதல் நடத்தப்படுவது, காசாவில் வாழும் மக்களின் நிலையை எவ்வளவு மோசமாக்கி உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.
உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்தத் தாக்குதலுக்கு, கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த மனிதாபிமானமற்ற போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன.