தமிழ்நாடு

ரயிலில் பகிரங்கமாக விற்பனையாகும் குட்கா.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ!

தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பகிரங்கமாக விற்பனையாகும் குட்கா.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ!
ரயிலில் பகிரங்கமாக விற்பனையாகும் குட்கா.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ!
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஒரு நபர் ரயிலில் சர்வசாதாரணமாகக் குட்கா விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், வெளி மாநிலங்களிலிருந்து குட்கா கடத்தி வரும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை வேரோடு ஒழிக்கும் நோக்கில் தமிழகக் காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில்களில் சோதனை நடத்தி, குட்கா ஊடுருவலைத் தடுக்க முயற்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில், காவல்துறை, பாதுகாப்புப் படையினர் என அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி, ஒருவர் குட்காவை பகிரங்கமாக விற்பனை செய்வது இந்த வீடியோவின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் ரயிலுக்குள் பல குட்கா பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வருகிறார். பயணிகள் பலரும் எந்தவித அச்சமுமின்றி அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்தச் சம்பவம் கோரமண்டல் விரைவு ரயில் கும்மிடிபூண்டியை கடந்து செல்லும்போது நடந்ததாகத் கூறப்படுகிறது. தற்போது, இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ, ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தைரியம் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.