சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் அடிக்கடி கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை நிகழ்வதால் பெரும்பாலான நாட்களில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது.
இந்த கண்ணாடி கூண்டு பாலம் ஆய்வு பணி மற்றும் பராமரிப்பு பணி கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்தார். இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் இன்று முதல் மீண்டும் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் கண்ணாடி கூண்டு பாலத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் இன்று குவிந்தனர்.